தமது தந்தை மற்றும் தாயை கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டில் இரு இராணுவ வீரர்கள் கொபேய்கனே பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தந்தையை மரத்தில் கட்டி வைத்ததோடு, தாயை தாக்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், பனாகொட தொழிநுட்ப பயிற்சி கல்லூரி பிரிவில் கடமையாற்றும் சகோதரர்கள் எனத் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

