நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலுள்ள ஒரு மின் உற்பத்தி இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய, தற்போது குறித்த இயந்திரம் முற்று முழுதாக செயலிழந்துள்ளதாக, இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
எதுஎவ்வாறு இருப்பினும், இதனால் மின் விநியோகத்திற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், குறித்த இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாரை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

