பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

361 0

மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிந்து விழுந்தமையால் உண்டான அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்த தகவல்களைத் திரட்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று காலை முதல் கொலன்னாவ ராகுல வித்தியாலயத்தில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இங்கு அமைக்கப்பட்டுள்ள தகவல் மத்திய நிலையத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தமது இழப்புகள் குறித்த தகவல்களை வழங்குமாறு, அரசாங்கம் கோரியுள்ளது.

இதேவேளை, குப்பை மேடு சரிந்து விழுந்ததால் பலியானவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், இதில் காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.