வடகொரியாவுடனான பொறுமை எல்லை கடந்துவிட்டது – அமெரிக்கா

337 0

வடகொரியாவுடனான பொறுமை எல்லை கடந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ் (Mike Pence) இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வட மற்றும் தென்கொரிய யுத்த சூன்ய வலயத்திற்கு மைக்பென்ஸ் நேற்று திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

வடகொரியாவின் புதிய ஏவுகணை சோதனை ஒன்று தோல்வியடைந்துள்ள நிலையில் மைக்க்கின் இந்த விஜயம் அமைந்துள்ளது.

இந்தநிலையில் இன்றைய தினம் தென்கொரியவும் அமெரிக்காவும் இணைந்து கூட்டு இராணுவ பயிற்சி ஒன்றில் ஈடுபட உள்ளதாக தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.