தமிழ்- சிங்கள புத்தாண்டு காலத்தில் பல்வேறு விபத்துகள் காரணமாக 665 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனையின் பதில் நிறைவேற்று பணிப்பாளர் அனில் ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த வருடத்தில் விபத்துக்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 13ம் திகதி தொடக்கம் 15ம் திகதி வரையிலான மூன்று நாட்களில் இடம்பெற்ற விபத்துகளில் சிக்கிய 261 பேர் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அனில் ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

