புநகரியில் விபத்து – ஒருவர் பலி. இருவர் காயம்

408 0

யாழ் போதானா வைத்தியசாலைப் பணிப்பாளரின் வாகனத்துடன் மோதுண்டு ஒருவர் பலியானார்.

சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை பூநகரி முட்கொம்பன் சந்தியில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து பூநகரி ஊடாக தனது சொந்த வாகனத்தில் பயணித்த யாழ் போதானா வைத்தியசாலைப் பணிப்பாளரின் வாகனம் பூநகரி பரந்தன் பாதையிலிருந்து முட்கொம்பன் நோக்கிச் செல்வதற்கு திருப்பிய போது பின்னால் வந்த உந்துருளி வாகனத்துடன் மோதுண்ட போதே ஒருவர் பலியாகியதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படனர்.

அதில் ஒருவர் யாழ் போதானா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பிரதான பாதையிலிருந்து முட்கொம்பன் வீதிக்கு திரும்ப முற்பட்ட வாகனத்தை முந்திச் செல்ல உந்துருளி முற்பட்ட போதே விபத்து ஏற்பட்டுள்ளது என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது