மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்தமையினால் ஏற்பட்ட அனர்த்தத்தில் நேற்றிரவு வரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
26 பேரில் 6 சிறு பிள்ளைகள் மற்றும் 9 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவத்தின் பின்னர் கிட்டத்தட்ட 45 பேர் தொடர்பில் தகவல் இல்லையென தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் காணாமல் போனோர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களுக்கமைய இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அவர்களை தேடும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 14ஆம் திகதி மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவத்தில் காயமடைந்தவர்களில் மூவர் இன்னமும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

