மாலபே கல்லூரி தொடர்பில் இணக்கமில்லை – லஹிரு

419 0

malabe-415x260மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை பகுதி அளவில் அரச நிறுவனமாக மாற்றுதற்கு தாங்கள் இணக்கம் வெளியிடவில்லை என்று பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

சைட்டம் எனப்படும் இந்த தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தை அரசாங்கமும், தனியார் துறையினரும் இணைந்து நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இதற்கு தாங்கள் உடன்பட போவதில்லை என்று பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் அறிவித்துள்ளது.

அதன் இணைப்பாளர் லஹிரு வீரசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.