அமெரிக்க இராணுவ உயர்கல்வி மாணவர்கள் முல்லைத்தீவு பயணம்!

479 0

download-6-1அமெரிக்க இராணுவக் கல்லூரி மாணவர்கள் போர் நிறைவடைந்தபின்னர் அங்குள்ள மக்களின் வாழ்க்கை நிலை தொடர்பாக ஆராய்ச்சி நடாத்துவதற்காக முல்லைத்தீவுக்கு நேற்றைய தினம் வருகை தந்திருந்தனர்.இம்மாணவர்களுடன், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் அலுவலர் தமெய்சா கென்றியும் வருகை தந்திருந்தார்.

இவர்கள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ரவிகரனுடன் இது தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன்,காலங்காலமாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் இன்னல்கள், இந்த இன்னல்களின் பாதிப்பால் தமது இனத்திற்காக போராட ஆயுதம் தூக்கியவர்களின் இன்றைய நிலமைகள், அதனை பயங்கரவாதம் என சிறீலங்காவும், உலகநாடுகளும் முத்திரை குத்தியமை தொடர்பாக விளங்கப்படுத்தியதாகத் தெரிவித்தார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பு நடவடிக்கைகள் குறித்தும் தெளிவுபடுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.