இஸ்லாமியர்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு: தெலுங்கானா சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்

214 0

பின்தங்கிய இஸ்லாமியர்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா தெலுங்கானா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பின்தங்கிய இஸ்லாமியர்கள் மற்றும் பழங்குடி மக்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா தெலுங்கானா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாக்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இருப்பினும் பாரதீய ஜனதா கட்சி மட்டும் இந்த மசோதாவுக்கு சட்டசபைக்கு உள்ளே மற்றும் சட்டசபைக்கு வெளியே கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது.
ஆனால் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் பின்தங்கிய இஸ்லாமியர்கள் மற்றும் பழங்குடி மக்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தன.
முன்னதாக அரசு வேலைகளில் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்ட 5 எம்.எல்.ஏ.க்களை தெலுங்கான சட்டசபை சஸ்பெண்ட் செய்தது.
இந்த மசோதா மூலம் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு வேலைகளில் இஸ்லாமியர்களுக்கு 12 சதவீதம் இடஒதுக்கீடு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.