வவுனியாவில் இலவச கண் சத்திரசிகிச்சை (காணொளி)

268 0

 

வவுனியாவில் 58 பேருக்கு இலவச கண் சத்திரசிகிச்சை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவை சேர்ந்த 58 பேருக்கு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானின் ஏற்பாட்டில் இலவச கண் சத்திரசிகிச்சை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ள முடியாதுள்ள வறுமைக் கோட்டுக்குட்பட்டோருக்கு இவ்வாறு இலவச கண் சத்திரசிகிச்சைக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலவச கண் சத்திரசிகிச்சை புத்தளத்திலுள்ள தனியார் வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.