மீதொடமுல்ல குப்பை கூலம் தற்காலிகமாக இடமாறியுள்ளது.

581 0

மீதொடமுல்ல குப்பை கொட்டும் தளம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதியின் பணிப்புரையில் பேரில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இரு வௌ;வேறு இடங்களில் குப்பைகளை கொட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த கலந்துரையாலின் போது, குப்பைகளை கொண்டு செல்லும் முறைகளில் உள்ள பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வு குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டதாக ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இதனிடையே, மீதொடமுல்ல குப்பை மேடு சரிந்ததில்; சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளது.

இதன்போது காயமடைந்தவர்கள் 13 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கு மீட்பு பணிகளுக்காக 600 மீட்பு பணியாளர்கள் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
3 உலங்கு வானூர்திகளும் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் 145 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 180 குடும்பங்களை சேர்ந்த 625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மீதொட்டுமுல்ல பிரதேசத்தில் குப்பை மேடு சரிந்து விழுந்ததின் மூலம் பாதிப்படைந்த மக்களுக்கு நட்டஈட்டை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா இதனை தெரிவித்தார்.

இதேவேளை, மீதொட்டுமுல்ல பிரதேசத்தில் பாதிப்படைந்த வீடுகளில் களவாட முயற்சித்த 20 பேரை காவற்தறையினர் கைது செய்துள்ளனர்.

அவர்கள் அங்குள்ள பணம் மற்றும் தங்க ஆபரணங்களை களவாட முற்சித்தித்ததாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.