வடமாகாண பட்டதாரிகள் ஏமாற்றம்

321 0

இலங்கை ஜனாதிபதியின் செயலாளர் எம்மை சந்திப்பார் உறுதி மொழியை வழங்குவர் என நாங்கள் நம்பியிருந்த நிலையில், இலங்கை சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தி ன் தலைவரே எங்களை சந்தித்திருக்கின்றமை எமக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என வடமாகாண பட்டதாரிகள் கூறியுள்ளனர்.

தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்ககோரி வடமாகாண பட்டதாரிகள் கடந்த 48 நாட்களாக யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக தொடர்ச்சியான கவனயீர்ப்பு போரா ட்டத்தை பல்வேறு நெருக்கடிகளுக்கும் மத்தியில் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை ஜனாதிபதியின் இணைப்பாளர் யாழ்.வருகை
தந்து போராட்டத்தை நடத்திவரும் பட்டதாரிகளை சந்திப்பார் என கூறப்பட்டது. ஆ னால் ஜனாதிபதியின் செயலாளர் வரவில்லை.

மாறாக இலங்கை சுதந்திர பட்டதாரி கள் சங்கத்தின் செயலாளர் மனோல பெரேராவே வருகைதந்திருக்கும் நிலையில் பட்டதாரிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இந்நிலையில் ப
ட்டதாரிகள் இது தொடர்பாக கூறுகையில், இலங்கை சுதந்திர பட்டதாரிகள் சங்கத் திற்கும் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற ஒரு சந்தி ப்பாகவே இந்த சந்திப்பு அமைந்துள்ளது.

நாங்கள் நம்பியிருந்தோம் ஜனாதிபதியின் செயலாளர் வருவார், 48 நாட்களாக நாங்கள் நடத்திவரும் போராட்டத்திற்கு ஒரு நியாயம் கிடைக்கும் எமது கோரிக்கையும் நிறைவேற்ற ப்படும் என ஆனால் அது நடக்கவில்லை.

நீங்கள் போராட்டம் நடத்தி 48 நாட்களின் பின்னர் போராட்டம் தொடர்பான அறிக்கையை ஜனாதிபதிக்கு வழங்குவதற்காக வந்திருக்கின்றீர்கள் இது பெரும் ஏமாற்றத்தை அளிக்
கிறது என வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் கூறியுள்ளனர்.