அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதலுக்கு தயார் – வடகொரியா

197 0

அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல்களை நடத்த தயாராக இருப்பதாக வடகொரியா எச்சரித்துள்ளது.

வடகொரியாவின் முன்னாள் தலைவர் கிம் சுங்கின் 105 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று இடம்பெற்ற நிகழ்வில் வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமது பிராந்தியத்தினுள் ஆத்திரமூட்டும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, வடகொரியா மீது தாக்குதல் நடத்தப்படும்பட்சத்தில் வடகொரியா தமது சொந்த பாணியில் தாக்குதல்களை நடத்தும் என வடகொரிய உயர் மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு பிரிவு உலக வங்கியின் நிதிபரிமாற்ற முறையினை ஹெக் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச தகவல்கள் இதனை தெரிவிக்கின்றன.

இதன் மூலம் உலக வங்கியில் இடம்பெறும் நிதிப் பரிமாற்றங்களை மறைமுகமாக கண்கானித்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.