நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற இந்த ஆட்சி தமிழ்மக்களுக்கு இதுவரை எதனையும் செய்து விடவில்லை – சு.பசுபதிபிள்ளை

255 0
நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற இந்த ஆட்சி தமிழ்மக்களுக்கு இதுவரை எதனையும் செய்து விடவில்லை என வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிபிள்ளை தெரிவித்துள்ளார்.
இன்று கிளிநொச்சி ஊடக கலை கலாச்சார அமையத்தில் நடைபெற்ற விசேட பத்திரிகையாளர்; சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவித்த வடக்கு மாகாண சபை உறுப்பினர்சு.பசுபதிப்பிள்ளை நல்லாட்சி என்று சொல்லப்படும் இவ்வாட்சி தமிழ் மக்களுக்கு எதனையும் செய்து கொடுக்கவில்லை.
இந்த அரசு செய்யும் செய்யும் என்று சொல்லப்படும் வார்த்தைகளையும் இனி எமது மக்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. ஐ.நா சபையில் ஒரு கதையும் இலங்கையில் வைத்து ஒரு கதையும் அங்கே ஒரு ஒப்பந்தம் இங்கே வந்து ஒரு பத்திரிகை மறுப்பு இப்படியெல்லாம் ஆட்சி தடம்புரண்டு தள்ளாடிக்கொண்டு செல்கின்றது.
இந்தசிங்கள தமிழ் புத்தாண்டை சிங்கள மக்கள் தென்பகுதியிலும் கிளநொச்சியிலும் கொண்டாடினார்கள் தமது உறவுகளை இழந்த நிலையில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் புதுவருடம் போன்ற எந்த நிகழ்வுகளையும் நின்மதியாக கொண்டாடியதாக இல்லை.
குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக இன்று 56 நாட்களாக கவனயீர்ப்புப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த மக்களின் துயரத்தை நல்லாட்சி அரசு புரிந்து கொள்வதாக இல்லை.
ஆட்சியென்பது மனித நேயமிக்க மனிதர்களிடமிருக்கவேண்டும் மாறான மனிதர்களிடமிருக்கக்கூடாதுகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தங்களுடைய உறவுகளை இழந்து இன்று பல ஆண்டுகள் கடந்துள்ளன.
அதனால் ஏற்பட்ட வலிகள் காரணமாகத்தான் இவ்வாறான இறுதி முடிவையெடுத்து இன்று மாதக்கணக்கில் தெருவிலும் கொட்டும் வெயிலிலும் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனை இந்த ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும் கடந்தமகிந்த அரசின் ஆட்சியில் பயங்கரவாதத்தடைச்சட்டம் என்ற ஒன்றை உருவாக்கி எமது இளைஞர் புயுவதிகளையும் பொதுமக்களையும் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.
காணாமல் போகச் செய்துள்ளனர்.அந்த மகிந்த ஆட்சிக்கு மாறாக ஒரு ஆட்சியை உருவாக்க வேண்டும் என அரசியல்ஞானம் குறைந்த எம்மவர்களும் சேர்ந்து கொண்டு ஒருபுதிய அரசை உருவாக்கினார்கள்.
அதனால் எங்களுக்கு விடிவு கிடைக்கும் எனக்கருதினார்கள் ஆனால் அது பொய்த்துவிட்டது.
கடந்த வரலாறுகளில் பண்டா செல்வா ஒப்பந்தம் கிளித்தெறியப்பட்டது.
ஒரு பாடமாக இருந்தாலும்இதனை ஆதரித்து ஆட்சியமைத்தார்கள். மகிந்த ஆட்சியில் எது எது எப்படி இருந்ததோ அது அது அப்படியே இந்த ஆட்சியிலும் உள்ளது நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற ஆட்சி தமிழ் மக்களுக்கு எதனையும் செய்து விடவில்லை.
செய்யும் செய்யும் என்று சொல்லுகின்ற வார்த்தைகளை எமது மக்கள் இனியும் நம்புவதற்கு தயாராக இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்போராட்டம் 55வது நாளாகவும் முன்னெடுக்கப்;பட்டு வருகின்ற நிலையில் கிளநொச்சி ஊடக கலை கலாச்சார அமையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்