இலங்கை கடற்பரப்பில் தீப்பிடித்த பனாமா நாட்டு கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது

215 0

இலங்கை கடற்பரப்பில் வைத்து தீப்பரவலுக்கு உள்ளான பனாமா நாட்டிற்கு சொந்தமான கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

எம் எஸ் சீ டெனியெலா என்ற குறித்த கப்பல் இன்று அதிகாலையில் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

பாதிப்புக்கு உள்ளான கொள்கலன்களை அகற்றும் நோக்கில் குறித்த கப்பல் துறைமுகத்திற்கு வந்துள்ளது.

கடந்த ஐந்தாம் திகதி சுமார் 14 ஆயிரம் கொள்கலன்களை சுமந்துசென்ற நிலையில் இலங்கையில் 120 கடல் மைல் தொலைவில் விபத்துக்கு முகம் கொடுத்திருந்தது.

கொள்கலன்களில் காணப்பட்ட இரசாயன பொருட்களே விபத்துக்கு காரணம் என நிபுணர்கள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.