நுவரெலியா ஹட்டன் நகரில், இரவு வேளைகளில் பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுவருடத்தை முன்னிட்டு, வெளிமாவட்டங்களில் இருந்து ஹட்டன் பிரதேசத்திற்கு வரும் வாகன சாரதிகளிடம் சோதனை மேற்கொள்வது மற்றும் வாகனங்களை கவனமாக செலுத்த வேண்டும் போன்ற அறிவுரைகளை வழங்குவதற்காக பொலிஸார் ரோந்துபணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ரோந்து பயணத்தின் போது சந்தேகத்திற்கு இடமான முறையில் வீதியில் செல்வபர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

