நாளை மலரவிருக்கும் ஏவிளம்பி சித்திரை வருடப்பிறப்பை கொண்டாட புத்தளம் மக்கள் தயாராகி வருகின்றனர்.
சித்திரைப் புத்தாண்டை கொண்டாட, தமிழ் மற்றும் சிங்கள மக்கள் பொருட்களை மிக ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் செறிந்து வாழும் புத்தளம், ஆனமடு, கல்பிட்டி, வண்ணாத்திவில்லு, முந்தல், உடப்பு, சிலாபம், முன்னேஸ்வரம், மாதம்பை, மாரவில், நாத்தாண்டி மற்றும் வென்னப்புவ அகிய நகரங்களில் சித்திரை புத்தாண்டு வியாபார நடவடிக்கைகள் களைகட்டியுள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

