யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனைத்து குருதி வகைகளும் அவசியம் தேவைப்படுகிறது- கலாநிதி ஜனனி தவராசா (காணொளி)

366 0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனைத்து குருதி வகைகளும் அவசியம் தேவைப்படுவதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வைத்திய கலாநிதி ஜனனி தவராசா கேட்டுக்கொண்டுள்ளார்.

குருதிக் கொடையாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்த காரணத்தினால் வைத்தியசாலைகளில் குருதித் தட்டுப்பாடு நிலவுகிறது என்றும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு குருதி தேவைப்படுவதனால் குருதி வழங்குனர்கள் குருதியை வழங்க முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் குருதிக்கொடை வழங்கப்பட்டது.