காட்டு யானை தாக்கியதில் மூன்று பேர் பலி!

409 0

நாட்டின் மூன்று பிரதேசங்களில் காட்டு யானை தாக்கியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

தணமல்வில , மீகஸ்வெவ மற்றும் நிகவெவ பிரதேசங்களில் காட்டு யானை தாக்கியதில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் தணமல்வில மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டனர்.

இதில் , இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை , மஹாஓய – டெம்பிடிய பிரதேசத்தில் வீடொன்றின் முற்றத்தில் இருந்த 16 வயது சிறுமியொருவர் காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி நேற்று உயிரிழந்துள்ளார்.