இப்பலோகம பிரதேசத்தில் வைத்து அண்மையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்டவர், குற்ற விசாரணை திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பியகம என்ற அஜந்த புஸ்பகுமார என்ற இவர் நொச்சியாகம பிரதேசத்தில் மறைந்திருந்த வேளையில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.
கொள்ளைக் குழு ஒன்றின் தலைவராக கருதப்படும் இவர், கடத்தப்பட்ட சம்பவமானது இவராலேயே திட்டமிடப்பட்ட ஒன்று என தெரியவந்துள்ளது.
கடந்த 9ஆம் திகதி வீட்டில் இருந்த இவர் வெள்ளை வான் ஒன்றில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டதாக, அவரது மனைவி காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்தார்.
எவ்வாறாயினும் கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம் பிரதேசத்தில் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்பு கொண்டவர் என தெரியவந்துள்ளது.

