மாலபேயில் விபத்து – இருவர் பலி

291 0

மாலபே – வெலிவிட்ட பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகினர்.

மாலபேயில் இருந்து வெலிவிட்ட நோக்கி பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் ரக வாகனம் ஒன்றுடன் உந்துருளி ஒன்று நேருக்கு நேர் மோதியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளர்.

சம்பவத்தில் உந்துருளியில் பயணித்த 19 வயது மற்றும் 28 வயதான இளைஞர்கள் படுகாயமடைந்து ஹேமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதான் பின்னர் உயிரிழந்தனர்.

சம்பவம் தொடர்பில் டிப்பர் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.