அந்நிய செலவானி கட்டுப்பாட்டு வரைவு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டு எதிர்க்கட்சியினர் உச்சநீதிமன்றில் மனு

210 0

அந்நிய செலவானி கட்டுப்பாட்டு வரைவு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டு எதிர்க்கட்சியினர் உச்சநீதிமன்றில் மனு ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில், குறித்த மசோதாவானது இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனவும் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன நீதிமன்ற வளாகத்தில் வைத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் புதிய வரைவு மசோதா அமுல் படுத்தப்படும் என்றால் தற்போது அமுலில் இருக்கும் சட்டமானது இரத்தாகும் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த வரைவு மசோதாவுக்கு எதிராக சட்டத்தரணி தர்ஷன வீரடுவ மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.