சிறீலங்காவுக்கான விசேட பிரதிநிதியை நியமிக்கிறது ஜப்பான்!

248 0

சிறீலங்காவின் நிலையான அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக தொடர்பாடல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஜப்பான் விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்க முடிவு செய்துள்ளது.

ஜப்பான் பிரதமரின் ஆலோசகர் ஹிரோதோ இசும், இலங்கைக்கான விசேட பிரதிநிதியாக நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் அமைச்சரவை செயலாளர் யோசிஹதே சுகா கூறியுள்ளார்.

ஜப்பானிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று (12) காலை இடம்பெற்ற சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது, இந்து சமுத்திர வலயத்தில் சுதந்திர கடற் போக்குவரத்து மற்றும் கடல்சார் பாதுகாப்பு சம்பந்தமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சிறீலங்கா எப்போதும் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் என்பதுடன் எந்தவிதத்திலும் ராணுவ நடவடிக்கைக்கு இலங்கை ஒத்துழைப்பு அல்லது இடமளிக்கப் போவதில்லை பிரதமர் உள்ளிட்ட குழுவினர் தௌிவுபடுத்தியுள்ளனர்.