கடந்த அரசாங்க காலத்தில் சைட்டம் கல்லூரியை தடை செய்திருக்க வேண்டும்!

275 0

சைட்டம் கல்லூரி கல்வியை வியாபாரம் செய்யப்போகின்றது எனத் தெரிந்தும் மஹிந்த காலத்தில் அதனை நடத்துவதற்கு யோசனைகள் முன்மொழியப்பட்டதாக ரவெசி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த காலத்திலேயே இது நாட்டிற்கு பொருத்தமானதா என சிந்தித்திருக்க வேண்டும் என புரவெசி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

சைட்டம் கல்லூரிக்காக வைத்தியர்கள் சங்கம் தீர்க்கமான ஒரு முடிவை எடுத்திருக்க வேண்டும், அவர்கள் கலந்துரையாடி அன்றே தடை செய்திருக்க வேண்டும் எனவும் கூறினார்.அவ்வாறு செய்திருந்தால் பின்னாளில் இலங்கையில் ஊழல்கள் செய்யாத வைத்தியர்கள் உருவாகுவார்கள். அரசியலில் உள்ளவர்ககள் இஷ்டத்தின்படியே ஆட்சி செய்து கொண்டிருக்கின்றார்கள்.

அதிலிருந்து வெளியே வர வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் மக்களின் பிரச்சினைகளை மட்டுமே ஆராய வேண்டும்.மாறாக அவர்களின் பிரச்சினைகளை பற்றி பேசுவதற்கு நாம் ஆட்சிக்கு அழைத்து வரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தேசத்தின் கட்டமைப்பையும், புரிந்துணர்வையும் மதிக்கத்தக்க சிறந்த கல்விமான்களே நாட்டிற்கு தேவை. ஆனால் ஆட்சியாளர்களின் செயற்பாடினால் கல்வியின் மதிப்பு சிதைவடைந்து கொண்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.