சீவல் தொழிலில் ஈடுபட்ட ஒருவர் பனை மரத்தில் வைத்து பாம்புக்கடிக்கு இலக்கானார்.

435 0

கிளிநொச்சி சம்புக்குளம் பகுதியில் சீவல் தொழிலில் ஈடுபட்ட ஒருவர் பனை மரத்தில் வைத்து பாம்புக்கடிக்கு இலக்கானார்.

இந்த நிலையில் அவர் கிளிநொச்சி பொதுவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி சம்புக்குளம் பகுதியில் நேற்று காலை வழக்கம் போன்று அவர் சீவல் தொழிலுக்காக பனைமரத்தில் ஏறிய போது பனை வட்டுக்குள் வைத்து கைவிரலில் பாம்பு கடித்துள்ளது.

இந்தநிலையில், பாம்புக்கடிக்கு இலக்கானவர் அயலவர்களால் மீட்கப்பட்டு கிளிநொச்சி பொதுவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கல்மடுநகர் சம்புக்குளத்தைச் சேர்ந்த 37 வயதான எஸ். இந்திரச்சித்தன் என்பவரே இவ்வாறுபாம்புக் கடிக்கு இலக்காகியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.