ஆளும் அரசாங்கம் 23 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது – நிதியமைச்சர்

290 0

கடந்த அரசாங்க காலத்தை காட்டிலும் தற்போது 23 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனை குறிப்பிட்டார்.

அன்று இருந்ததை காட்டிலும் தற்போது 23 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தற்போது குறைக்கப்பட்டுள்ளன.

மரக்கறியை எடுத்துக்கொண்டாலும் விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளன.

பால்மாவை எடுத்துக்கொண்டால் 100 ரூபா சேமிப்பாக கொள்ள முடியும் எனவும் நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.