ட்ரம்ப் பதவி ஏற்றதன் பின்னர் ரஷ்ய அமெரிக்க உறவில் பாதிப்பு – விளாடிமீர் புட்டின்

292 0

கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றதன் பின்னர் ரஷ்ய அமெரிக்க உறவுகள் பாதிப்படைந்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இந்த கருத்தினை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் அமெரிக்க வெளிவிவகார அமைச்சரை மொஸ்கோவில் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, சிரியாவில் ரசாயன ஆயுத பிரயோகம் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது, சிரிய இராணுவத்திற்கு ரஷ்யா வழங்கி வரும் ஆதரவினை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.