சோமாலிய கொள்ளையர்களிடம் சிக்கிய இலங்கையர்கள் நாடு திரும்பினர்

297 0

மூன்று தினங்களாக சோமாலிய கடற்கொள்ளையர்களினால் பிணை கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்டிருந்த ஏரிஸ் – 13 என்ற கப்பலின் இலங்கை பணியாளர்கள் எட்டு பேர் இன்று நாடு திரும்பினர்.

கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தின் ஊடாக அவர்கள் இன்று மாலை நாடு திரும்பினர்.

இவர்கள் சோமாலிய கொள்ளையர்களின் பிடியில் இருந்து விடுப்பட்டு சுமார் ஒரு மாத காலத்தில் நாடு திரும்பியுள்ளனர்.

ஏரிஸ் -13 என்ற எண்ணெய் கப்பல் எகிப்தில் இருந்து சோமாலியா மொகடீஸ் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளை, சோமாலிய கொள்ளையர்களால் கடந்த மார்ச் மாதம் 14ஆம் திகதி கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.