சமூகத்தில் ஒதுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வரும் தமக்கும் ஆட்சியதிகாரத்தில் பங்குகொள்ளும் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என ஆதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருகோணமலை மூதூர் பிரதேச ஆதிவாசிக் குடிகளுக்கான இணைப்பாளர் கே. ஸ்ரீலால் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஆதிவாசிகளின் சிறப்பு சந்திப்பு பாட்டாளிபுரம் கிராமத்தில் நேற்றிரவு இடம்பெற்றது.
இதன்போது கருத்துரைத்த ஆதிவாசிகள், தங்கள் சமூகத்தின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவும் அந்த பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காகவும், தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

