தமிழ் – சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் சிறப்பு பேரூந்து மற்றும் தொடரூந்து சேவைகள் இடம்பெறவுள்ளன.
இன்றைய தினம் சொந்த ஊர்களை நோக்கி பயணிப்பவர்களின் நலன் கருதி பண்டாரவளை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு சிறப்பு தொடரூந்து சேவைகள் நடாத்தப்படவுள்ளன.
தொடரூந்து போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்ஹ இதனை தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலத்தை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபை 2 ஆயிரத்து 900 பேரூந்துக்களை சேவையில் ஈடுபட தீர்மானித்திருந்ததாக அதன் தலைவர் ரமல் சிறிவர்த்தன தெரிவித்துள்ளார்.
எனினும் இன்றைய தினம் வரை ஆயிரம் பேரூந்துக்களை மாத்திரமே சேவையில் ஈடுபடுத்த முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இன்றும் நாளையும் தேவையான அளவு பேரூந்துக்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்த்தன தெரிவித்துள்ளார்.

