அமெரிக்க முதல் பெண்மணிக்கு நட்ட ஈடு வழங்க பிரித்தானிய ‘டெய்லி மிரர்’ ஒப்புக்கொண்டுள்ளது.

343 0

அமெரிக்க முதல் பெண்மணி மெலானியா ட்ரம்பிற்கு நட்ட ஈடு வழங்க பிரித்தானிய ‘டெய்லி மிரர்’ செய்தி தாள் ஒப்புக்கொண்டுள்ளது.

கடந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தில் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, அவர் குறித்த கட்டுரை ஒன்று அந்த செய்திதாளில் வெளியானது.

அதில், வேட்பாளராக போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்பிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தக் கூடிய வகையில் மெலானியா ட்ரம்பின் அலங்காரப்பணி தொடர்பில் கட்டுரை வெளியாகியிருந்தது.

அதற்கு எதிராக கடந்த பெப்ரவரி மாதம் மெலானியா ட்ரம்பினால் லண்டன் உச்ச நீதிமன்றில், 15 கோடி அமெரிக்க டொலர் நட்ட ஈடாக கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

தற்போது அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், குறித்த செய்தி தாள், நட்ட ஈட்டை வழங்க இணங்கியதுடன், மன்னிப்பு கோரவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், உண்மையிலேயே வழங்கப்பட உள்ள நட்ட ஈடு தொடர்பான விபரம் நீதிமன்றினால் வெளியிடப்படவில்லை.

30 லட்சம் அமெரிக்க டொலரினை அவர் ஏற்க முன்வருவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.