இலங்கையின் நிலையான அபிவிருத்தி செயற்பாடுகளை இணைப்பு செய்வதற்காக சிறப்பு பிரதிநிதி

248 0
இலங்கையின் நிலையான அபிவிருத்தி செயற்பாடுகளை இணைப்பு செய்வதற்காக சிறப்பு பிரதிநிதி ஒருவரை நியமிப்பதற்கு ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய ஜப்பான் பிரதமரது ஆலோசகர் ஹிரோதோ இசும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் அமைச்சரவை செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ உள்ளிட்ட தரப்பினர் அந்த நாட்டின் பிரதமர் காரியாலயத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இதன்போதே ஜப்பான் அமைச்சரவை செயலாளர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கடல் பிராந்தியத்தில் கடற்படை போக்குவரத்து மற்றும் சமுத்திர பாதுகாப்பு தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
சமாதானம் மற்றும் பாதுகாப்புக்காக சகல சந்தர்ப்பங்களிலும் பொறுப்புடன் செயலாற்றவுள்ளதாகவும் ஜப்பான் அமைச்சரவை செயலாளர் தெரிவித்துள்ளார்.