நோயாளர்களின் மரபணு பரிசோதனையை சோதித்து, அதற்கமைய ஒளடதங்களை நிர்ணயிக்கும் செயற்திட்டம்

334 0
நோயாளர்களின் மரபணு பரிசோதனையை சோதித்து, அதற்கமைய ஒளடதங்களை நிர்ணயிக்கும் செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் சிறப்பு மருத்துவர்கள் சிலர் மேற்கொண்ட பரிசோதனைகளின் தரவுகளுக்கமைய இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, முதலில் புற்றுநோய்க்காக இந்த முறைமையை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.