கம்பஹா துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் 2 பேர் கைது

307 0

கம்பஹா – கிரிந்திவெல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை கனேமுல்ல பிரதேசத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் இரண்டும் 51 ரவைகளையும் கைப்பற்றியதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

கனேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த அவர்கள், இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

கடந்த 8 ஆம் திகதி கம்பஹா – கிரிந்திவெல பிரதேசத்தில் வியாபாரி ஒருவர் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த வியாபாரி காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.