அதிவேக வீதியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

400 0

கடந்த சில நாட்களாக அதிவேக பாதையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிவேக பாதை பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவு கூறியுள்ளது.

கடந்த சில நாட்களாக நாள் ஒன்றுக்கு சுமார் 95,000 வாகனங்கள் அதிவேகப் பாதையால் பயணித்துள்ளதாக அந்தப் பிரிவின் பணிப்பாளர் எஸ். ஓபநாயக்க கூறினார்.

அதிவேகப் பாதையை பயன்படுத்துவோரின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதுடன், தேவையான சந்தர்ப்பங்களில் 1969 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில் அதிவேகப் பாதையை பயன்படுத்தும் சாரதிகள் பாதுகாப்பான முறையில் வாகனங்களை செலுத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி சாரதிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.