கொட்டதெனியாவ, படல்கம, கட்டுகெந்த பிரதேசத்தில் பெண்ணொருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு, வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த பெண் 68 வயது மதிக்கத்தக்கவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் குழுவொன்று அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

