சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய ஒரு தொகை மதுபானம், நிதியமைச்சின் போதை ஒழிப்பு சுற்றிவளைப்பு பிரிவால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஒருகொடவத்தை சுங்க பிரிவின் களஞ்சியசாலைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வௌிநாட்டு மதுபானங்கள் கைப்பற்றப்பட்டதாக நிதியமைச்சு கூறியுள்ளது.
07 இறக்குமதியாளர்களின் பெயர் குறிப்பிடப்பட்டு இத்தாலியில் இருக்கும் இலங்கையர்கள் குழுவொன்றினால் இவை நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பண்டிகைக்காலத்தில் இதுபோன்ற விடயங்கள் பொதுவாக இடம்பெறுவதால் தொடர்ச்சியான சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்படும் என்று , நிதியமைச்சின் போதை ஒழிப்பு சுற்றிவளைப்பு பிரிவின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

