தற்போதைய அரசாங்கத்தை விரட்டியடிக்க பொறுப்புடன் செயலாற்றும் எந்தவொரு கட்சிக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் ஒத்துழைப்பு கிடைக்க பெறும் என அறிவிக்கபப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன் வெளியிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் நாளுக்கு நாள் மக்களின் எதிர்பை சம்பாதித்து வருகிறது.
பொருளாதார ரீதியாக நாடு பாதிப்புக்களை சந்தித்துள்ளது.
நாட்டின் இறைமை, சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் என்பன சூறையாடப்பட்டுள்ளன.
இதற்கு எதிராக மே முதலாம் திகதி பாரிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

