பேராதனை பல்கலைகழகத்தின் விவசாய பீட முதலாம் வருட மாணவர்களுக்கு பகிடி வதை புரிந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 15 சிரேஸ்;ட மாணவர்களது விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இன்றைய தினம் கண்டி முதன்மை நீதவான் கிஹான் இந்திக்க அத்தநாயக்க முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.
இதன்படி அவர்களை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்கள் கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களது பிணை கோரிக்கைகள் நான்கு தடவைகள் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

