சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட புகைப்பொருள், பீடி மற்றும் பாதணிகள் என்பன பேலியகொட புதிய சுங்க தளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடக பேச்சாளர் தர்மசிறி கஹந்தவ தெரிவித்துள்ளார்.
80 லட்சம் ரூபா பெறுமதியான குறித்த பொருட்கள் சென்னையில் இருந்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

