பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியில் திடீர் தீப்பரவல்

342 0

திருகோணமலை மூதூர் பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீர் தீப்பரவலுக்கு இலக்காகியுள்ளது.

இதனையடுத்து குறித்த முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது.

இதன்போது குறித்த முச்சக்கரவண்டியில் மூவர் பயணித்ததாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் அவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பு ஏற்பட வில்லை எனவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.