வாஸ் குணவர்த்தன உட்பட்ட 7 பேரின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

318 0

சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி காவற்துறைமா அதிபர் வாஸ் குணவர்த்தன மற்றும் அவருடைய புதல்வர் உட்பட்ட 7 பேரின் விளக்கமறியலில் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அவர்கள் அடுத்த மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குற்ற புலனாய்வு திணைக்களத்தினால் அவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் பிரதி காவற்துறைமா அதிபர் வாஸ் குணவர்த்தன மற்றும் அவருடைய புதல்வர் ஆகியோர் பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சியாம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பான குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.