சுதந்திர கட்சியின் புதிய அமைப்பாளர்கள் நியமனம்

308 0

குருணாகலை மாவட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தொகுதி அமைப்பாளர்கள் 4 பேரும் மாவட்ட அமைப்பாளர்கள் 3 பேரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் அவர்களுக்கான நியமனக்கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பிங்கிரிய தொகுதி அமைப்பாளராக இருந்த அமைச்சர் தயாஸ்ரீ ஜயசேகர பண்டுவஸ்நுவர தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கொழும்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சகல அமைப்பாளர்களும் இன்று கட்சியின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தின கூட்டத்தை சிறந்த முறையில் நடத்துவதன் பொருட்டு இவ்வாறு, அமைப்பாளர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க உள்ளிட்டவர்களின் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.