கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 51வது நாளாகவும் தீர்வின்றி தொடர்கிறது.
கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
அன்று தொடக்கம் இன்று வரையில் தொடர்ச்சியாக அவர்கள் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.


