அதிக வெப்பமான காலநிலை – கண் நோய் பாதுகாப்பு தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை

341 0

நிலவும் அதிக வெப்பமான காலநிலை காரணமாக கண் நோய் பாதுகாப்பு தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

கொழும்பு கண் நோய் மருத்துவமனை இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

கண்கள் சிவத்தல் மற்றும் கண்ணீர் சொரிதல் போன்ற அறிகுறிகள் ஏற்பாட்டால், அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று மருத்துவ சோதனைகளை மேற்கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, அதிக வெப்பமான காலநிலை காரணமாக உடலில் உள்ள நீர் வரண்டு போவதனை தடுப்பதற்கான வழிமுறைகளை கையாளவேண்டும் என சுகாதார அமைச்சு கோரியுள்ளது.

தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக உடலில் உள்ள நீர் வரண்டு, உடல் பல்வேறு நோய்தாக்கங்களுக்கு உள்ளாகின்றமை குறிப்பிடத்தக்கது.