தமது மனைவியை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள இலங்கை அகதி ஒருவரை நாடு கடத்த கனடாவின் குடிவரவு குடியகல்வு சபை அறிவுறுத்தியுள்ளது.
ரேடியோ கனடா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
சிவலோகநாதன் தனபாலசிங்கம் என்ற குறித்த இலங்கை அகதி, இது தொடர்பில் மேன்முறையீடு செய்யும் பட்சத்தில், குறைந்தது நான்கு ஆண்டுகள் வரையில் அங்கு தங்கியிருக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வழக்கு தொடர்பான மறுமதிப்பீடு வரையில், அவரை எதிர்வரும் வியாழக்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஆணையாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.
2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அஞ்சு பாஸ்கரன் என்ற பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடலம் தொடர் குடியிருப்பில் இருந்து மீட்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில், அவரின் கணவரான சிவலோகநாதன் தனபாலசிங்கம் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

