அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படும் தொழிற்சங்கம் என உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
மாலபே சைட்டம் நிறுவனம் சம்பந்தமான பிரச்சினையில் தலையிட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு எந்த உரிமையும் இல்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டி ஹாரிஸ்பத்து பிரதேசத்தில் நேற்று (10) நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மருத்துவக் கல்வி சம்பந்தமான அதிகாரங்கள் பல்கலைக்கழங்களுக்கும், கல்விச் சபைகளுக்குமே இருக்கின்றன.
சைட்டம் நிறுவனம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை சம்பந்தமாக இலங்கை மருந்துச் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

