இலங்கை கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைக்கும் முன்னர் இலங்கையின் அணியின் சகல துறை ஆட்டகாரான பேர்டி விஜேசிங்க நேற்று (10) காலமானார்.
விஜேசிங்க இறக்கும் போது அவருக்கு வயது 96. இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து விலகிய பின்னர், கிரிக்கெட் பயிற்சியாளராகவும் சிலோன் டெய்லி நியூஸ் பத்திரிகையின் விளையாட்டு ஆசிரியராகவும் பணியாற்றினார்.
மேலும் விஜேசிங்க சிறந்த கிரிக்கெட் விளையாட்டு விமர்சகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

