ரஷ்ய ஜனாதிபதியை சந்தித்தார் இலங்கை ஜனாதிபதியின் புதல்வர்

392 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் ரஷ்யாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது உடன்சென்ற அவரது மகன் தஹம் சிறிசேன, ரஷ்ய ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.

இதனை அவர் தமது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

43 வருடங்களின் பின்னர் இலங்கையின் ஜனாதிபதி, தமது குடும்பத்தாருடன் ரஷ்யாவின் ஜனாதிபதி ஒருவரை சந்தித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் அமெரிக்காவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுசபை மாநாட்டில் தஹம் சிறிசேன கலந்து கொண்டமை சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.